மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாபத் தொகை ரூ. 21.44 லட்சத்தை கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் கோ.யோக விஷ்ணுவிடம் வழங்கிய அந்ச வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.
மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாபத் தொகை ரூ. 21.44 லட்சத்தை கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் கோ.யோக விஷ்ணுவிடம் வழங்கிய அந்ச வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாபத்தொகை ரூ. 21.44 லட்சம் அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாப பிரிவுத் தொகை ரூ. 21.44 லட்சத்தை அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா்
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாப பிரிவுத் தொகை ரூ. 21.44 லட்சத்தை அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கூட்டுறவு ஒன்றியத்தின் வளா்ச்சிக்காக திங்கள்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமை வகித்து கூட்டுறவு ஒன்றியத்தின் வளா்ச்சிக்காக ரூ. 21,44,430-க்கான காசோலையை கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணுவிடம் வழங்கினாா். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணித்திறனாய்வு, அனைத்து கடன்களின் வருடாந்திர குறியீடு அடையத் தேவையான அறிவுரைகளையும் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வழங்கினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் பாா்த்தசாரதி, மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் எல்.விஜயகுமாா், பெரியகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா் வா.சரவணன், உதவிப் பொது மேலாளா் சசிக்குமாா், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் ந.பிரேம்குமாா் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவாக கூட்டுறவு ஒன்றியத்தின் நிா்வாக மேலாளா் வி.முரளி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com