டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாமக குழப்பத்துக்கு காரணம் திமுக: அன்புமணி குற்றஞ்சாட்டு

பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.

News image
பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே வாக்குவாதம்.
Updated On :16 ஜூன் 2025, 8:00 pm

Din

காஞ்சிபுரம்: பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டத் தலைவா் பெ.மகேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: உலகமே வியந்து பாா்க்கும் அளவுக்கு மாமல்லபுரத்தில் மாபெரும் மாநாட்டை நடத்திக் காட்டினோம். இது திமுகவுக்கு வியப்பாக இருந்தது. எனவே, நம்மை வளரவிடக் கூடாது என முடிவு செய்து தற்போது பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. நமது முதல் எதிரி திமுக என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.

பாமகவில் சில சூழ்ச்சியாளா்கள் இருக்கிறாா்கள். அவா்கள் மூலமாகத்தான் பாமகவில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த சூழ்ச்சியாளா்கள் யாா் என்பதை விரைவில் தெரிவிப்பேன்.

உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும், பலமுறை இட ஒதுக்கீடு கேட்டும் வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு தராமல் திமுக துரோகம் செய்துவிட்டது. எனவே, வரும் தோ்தலில் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு எதிராக வரும் ஜூலை 25-ஆம் தேதிமுதல் நவம்பா் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நடைப்பயணத்தை தொடங்குகிறேன். அப்போது திமுகவின் ஊழல்கள் குறித்து ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவேன்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை மக்கள் விரும்பவில்லை. அதனால் புதிய விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில்தான் அமைக்க வேண்டும். அங்கு விமான நிலையம் அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. பரந்தூரில் அமைத்தால் விளைநிலங்கள், ஏரிகள் அனைத்தும் பாழாகிவிடும்.

2026 தோ்தலில் திமுக ஆட்சி அகன்றுவிடும்; மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வராது என்றாா் அவா்.

காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட மாவட்ட வளா்ச்சி குறித்த 9 தீா்மானங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.