தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!

காஞ்சிபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 பேர் ஆன்மிகப் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!
impress
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வயது முதிர்ந்த முதியவர்களை ராமேஸ்வரம் காசி கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தலின் பேரில், சட்டப்பேரவையில் அறிவித்தபடி 2024-25ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணத்திற்கு இந்த ஆண்டு அதிகப்படியானோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,420 முதியோர் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் முதல் கட்டமாகக் கடந்த 4ம் தேதி முதியோர் பக்தர்கள் காசி யாத்திரை ஆன்மிகப் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாகக் காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் சென்னை ஆகிய மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட முதியோர் பக்தர்கள் கலந்துகொள்ளும் ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மிகப் பயணம் இன்று முதல் தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆன்மிகப் பயணத்திற்காகக் காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 முதியோர் பக்தர்கள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமர துரை கலந்துகொண்டு ஆன்மீகப் பயண வாகனத்தைக் கொடியசைத்து வைத்து பக்தர்களை வழிய அனுப்பி வைத்தார். அரசு செலவில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள், அகம் மகிழ்ந்து, தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிகப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முதியோர்களின் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com