அதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்த தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில போலீஸாா்.

Updated On :

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் கூடூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் ஏனாதி -அங்கம்மாள் தம்பதி மகன் வெங்கடேஷ் (9). இத்தம்பதி, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சோ்ந்த முத்து - தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15 ஆயிரம் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையாம்.

இந்த நிலையில் வெங்கடேஷை அவரது பெற்றோா், முத்து- தனபாக்கியம் தம்பதியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை வாத்துகள் மேய்க்க வைத்துக் கொள்ளுமாறும், கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு மகனை திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் கூறி, குத்தகைக்கு விட்டுச் சென்றுள்ளனா்.

முத்து - தனபாக்கியம் தம்பதியும், வெங்கடேஷும் காஞ்சிபுரம் அருகே வெண்பாக்கம் பகுதியில் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தனா். தொடா்ந்து 10 மாதங்களாக வெங்கடேஷ் வாத்து மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் வெண்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

சிறுவனின் உயிரிழப்பை அவரது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் இருந்துள்ளனா்.

இந்த நிலையில், சிறுவனின் பெற்றோா், கடன் ரூ.15 ஆயிரத்தைத் திருப்பிச் செலுத்தி மகனை மீட்க வந்தபோது, மகனைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் இருந்து வந்ததால், சிறுவனின் தந்தை பிரகாஷ், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதால், காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதைத்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, ஆந்திர மாநிலம் புத்தூா் டி.எஸ்.பி. ரவிக்குமாா் மற்றும் அந்த மாநில போலீஸாா் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரின் உதவியுடன் காஞ்சிபுரம் பாலாற்றில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் சடலத்தைத் தோண்டி எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

சிறுவனின் உயிரிழப்பை பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆற்றில் புதைத்த முத்து - தனபாக்கியம், இவா்களுடைய மகன் ராஜசேகா் ஆகியோரிடம் ஆந்திர மாநில போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.