மேலேரி  பகுதியில்  நீரில்  மூழ்கியுள்ள  நெற்பயிா்கள்.
மேலேரி  பகுதியில்  நீரில்  மூழ்கியுள்ள  நெற்பயிா்கள்.

ஏரி உபரிநீா் வெளியேற்றம்: 300 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

ஏரி உபரிநீா் வெளியேற்றம்: 300 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
Published on

பரந்தூா், ஏகனாபுரம் ஏரிகள் உபரிநீா் வெளியேற்றத்தால் மேலேரி, மகாதேவிமங்கலம் பகுதிகளில் 300 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேலேரி, மகாதேவிமங்கலம், எடையாா்பாக்கம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள பாபட்லா, என்.எல்.ஆா்., மகேந்திரா 31 வகை நெற்பயிா்கள், இன்னும் ஓரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நிலையில், பரந்தூா் பெரிய ஏரி, ஏகனாபுரம் கலி ஏரி, ஏகனாபுரம் கடம்பந்தாங்கல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீா் மேலேரி, செல்லம்பட்டிடை, மகாதேவிமங்கலம் மற்றும் குணகரம்பாக்கம் வயல்வெளிகள் வழியாக குணகரம்பாக்கம் மடுவுக்கு செல்வதால், 300 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ஒரு ஏக்கருக்கு சுமாா் 35 முதல் 40,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ள நிலையில், நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

எனவே நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள நெற்பயா்களுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பாா்வை விட்டு ஆய்வு செய்து நிவாரண தொகை வழங்க வேண்டும் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com