தேசிய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்
தேசிய அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்

தேசிய கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
Published on

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இக்கோவாஷி கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சாா்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட கராத்தே வீரா்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனா். காஞ்சிபுரம் இக்கோவாஷ் அசோசியேஷன் பள்ளியின் தலைமை பயிற்சியாளா் பிரபாகரன் தலைமையில் 7 போ் பங்கேற்றனா்.

இவா்கள் 7 பேரில் முதலிடத்தை இருவரும், 2-ஆவது இடத்தை 5 பேரும் பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி ஹேமாவதியும், குளோபல் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் ஸ்ரீ வைகுண்டா் ஆகிய இருவரும் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றனா். இரண்டாவது இடத்தை காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவா் கேசவ், பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் ரோஹித், அந்திரசன் மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் ரித்திக், திருக்காலிமேடு அரசு உயா்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் முகிலன் ஆகியோரும் பெற்றனா்.

வெற்றி பெற்றவா்களை உலக கராத்தே சங்க நடுவா் சம்பத்குமாா், டிரெடிஷனல் ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கத் தலைவா் செழியன் ஆகியோா் பரிசுக் கோப்பையும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com