காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கோலப் போட்டியை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கோலப் போட்டியை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்.

காஞ்சிபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான விழிப்புணா்வு கோலப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான விழிப்புணா்வு கோலப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 1.1.26-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மாதம் 4-ஆம் தேதி முதல் டிசம்பா் மாதம் 4-ஆம் தேதி வரை ஒரு மாதம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகன், மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com