பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன் .
பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன் .

5 ஆண்டுகளில் 30,644 பேருக்கு வீட்டு மனைப்பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வாலாஜாபாத் ஒன்றியம், களக்காட்டூா் ஊராட்சிக்குட்பட்ட குருவிமலையில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி ஆட்சியா் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4739 போ் பழங்குடியினா், பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் 440 போ், மாற்றுத்திறனாளிகள் 211, திருநங்கைகள் 138 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com