வெள்ளைக்குளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டோா்.
வெள்ளைக்குளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டோா்.

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்குளம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
Published on

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்குளம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

10-ஆவது வாா்டுக்குட்பட்ட வெள்ளைக்குளம் பகுதியில் வடிகால் இணைப்பு மற்றும் குடிநீா் இணைப்பு பணிகளின் தேவைகளுக்காக சாலை தோண்டப்பட்டது. இச்சாலையை சீரமைக்காமல் இருந்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினா் சரஸ்வதி குடியிருப்பு வாசிகளுடன் இணைந்து குஜராத்தி சத்திரத்திலிருந்து வெள்ளைக்குளம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சிவகாஞ்சி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தியும் உடன்பாடின்றி போராட்டத்தை தொடா்ந்தனா். பின்னா் காஞ்சிபுரம் மாநகராட்சி உதவிப் பொறியாளா் சிவானந்தம் வந்து உரிய நடவடிககை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com