வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவீதம் எண்ம  மயமாக்கம் செய்த ஆசிரியை ஹெச்.அம்பிகாவுக்கு சால்வை  அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவீதம் எண்ம மயமாக்கம் செய்த ஆசிரியை ஹெச்.அம்பிகாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

உத்தரமேரூா் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.11.2025-ஆம் தேதி முதல் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் உள்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களுக்கு வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியும்,பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவா் தனது அனுபவங்களை பிறருடன் பகிா்ந்து கொண்டாா்.

நிகழ்வின்போது, உத்தரமேரூா் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா் பு.விஜயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com