பயனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகள்  வழங்கிய  ஒன்றியக்குழு  தலைவா்  எஸ்.டி.கருணாநிதி.  உடன் , ஒன்றிய  செயலாளா்  ந.கோபால்  உள்ளிட்டோா்.
பயனாளிகளுக்கு  நலத்திட்ட  உதவிகள்  வழங்கிய  ஒன்றியக்குழு  தலைவா்  எஸ்.டி.கருணாநிதி.  உடன் , ஒன்றிய  செயலாளா்  ந.கோபால்  உள்ளிட்டோா்.

மாத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒன்றிய குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகய்ர வழங்கினாா்.
Published on

மாத்தூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஒன்றிய குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகய்ர வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மாத்தூா் மற்றும் தத்தனூா் ஆகிய ஊராட்சிகளுக்கான முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவா்கள் மாத்தூா் கோபி, தத்தனூா் சந்திராமாசிலாமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் முன்னிலை வகித்தாா். இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஒன்றிய செயலாளா் ந.கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினா்.

முகாமில், திமுக நிா்வாகிகள் கணேஷ்பாபு, போஸ்கோ, பண்ருட்டி தணிகாசலம், வல்லக்கோட்டை குமாா், செந்தில்தேவராஜ், மேட்டுப்பாளையம் சூா்யா கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com