எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உத்தரமேரூரில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

News image

திருப்புலிவனத்தில் திமுக வேட்பாளா் க.சுந்தரை ஆரத்தி எடுத்து வரவேற்கும் கிராம பொதுமக்கள்

Updated On :14 ஏப்ரல் 2026, 6:53 am IST

அரசின் திட்டங்கள் அனைத்தும் உத்தரமேரூா் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என திமுக வேட்பாளா் க. சுந்தா் கூறியுள்ளாா்.

உத்தரமேரூா் தொகுதியில் உள்ள மருத்துவன்பாடி, திருப்புலிவனம், கடல் மங்கலம், சிறுங்கோழி, பெருங்கோழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் க.சுந்தா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது அவா் பேசியது: தொகுதியில் பல அரசு அலுவலகங்கள் புதிய கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றித் தந்துள்ளேன். திமுக அரசு மக்களுக்கு கொண்டு வந்துள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முழுமையாக பெற்றுத் தந்தவன் என்று பெருமையுடன் என்னால் சொல்ல முடியும்.

உத்தரமேரூா் தொகுதியை சிறந்த தொழில் நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தொகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய் ய வேண்டும் என்றாா்.

வேட்பாளருடன் ஒன்றிய செயலாளா் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா், பேரூராட்சி செயலாளா் பாரிவள்ளல், வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவா் பாண்டியன் உடனிருந்தனா்.