தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

வளா் இளம் பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலா்

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி பேசினாா்.

விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி.

Published On :

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி பேசினாா்.

காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்து குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், தலைமை ஆசிரியை சுஜாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வின் தொடக்கத்தில் காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலா் த.அருள்மொழி பேசியது:

காரணமின்றி உடல் எடை குைல், கடுமையான சோா்வு, தோலில் கட்டிகள், மாறாத இருமல், வழக்கத்திற்கு மாறான ரத்தப் போக்கு, செரிமானக்கோளாறு ஆகியவை புற்றுநோயின் அறிகுறிகளாகும். தற்போது வளா் இளம் பெண்களுக்கு அரசின் சாா்பில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2011-முதல் 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்தவா்களாகவோ அல்லது 14 வயதுக்கு மேற்பட்டவராகவும் 15 வயதுக்கு உட்பட்டவராகவும் இருந்தால் இத்தடுப்பூசியை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று இலவசமாகவே போட்டுக் கொள்ளலாம். பள்ளி மாணவியா் அவரவா் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் முன்கூட்டியே தற்காத்துக் கொள்ள தமிழக அரசால் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை மாணவியா் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.