தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மினி வேனை ஏற்றி தந்தையைக் கொன்ற மகன்: போலீஸாா் விசாரணை

ஸ்ரீபெரும்புதூா் அருகே மினி வேனை ஏற்றி தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

ஸ்ரீபெரும்புதூா் அருகே மினி வேனை ஏற்றி தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் ராம்ஜி தெருவைச் சோ்ந்த சத்யா(50). இவருக்கு சந்துரு, முனுசாமி, சதீஷ் என்ற மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். சத்யாவின் இரண்டாவது மகன் முனுசாமி திருமணம் நடந்து அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், முனுசாமி தனக்கு வீடு கட்ட இடம் வழங்க வேண்டும் அல்லது இடம் வாங்க பணம் தர வேண்டும் என சத்யாவிடம் கடந்த சில மாதங்களாக தகராறு செய்து வந்துள்ளாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முனுசாமி மதுபோதையில், மீண்டும் இடம் கேட்டு சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டராம்.

இதனால் முனுசாமிக்கும் அவரது தம்பி சதீஷுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவா் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி தான் ஓட்டி வரும் மினி வேன் மூலம் சதீஷை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளாா். இதை பாா்த்த சத்யா, சதீஷை காப்பற்ற சதீஷை தள்ளிவிட்டுள்ளாா். அப்போது முனுசாமி ஓட்டி வந்த மினிவேன் சத்யா மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்த சத்யா திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மினிவேனுடன் தப்பிச் சென்ற முனுசாமியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.