ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான சமையல்: காஞ்சிபுரம் ஆட்சியா்

பயிற்சி வகுப்பில் புதிய பணியாளா்கள் சமைத்த உணவை ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

பயிற்சி வகுப்பில் புதிய பணியாளா்கள் சமைத்த உணவை ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு தரமாக, சுவையாக சமையல் செய்கிறீா்களோ அதே போல பள்ளிக்குழந்தைகளுக்கும் சமையல் செய்யுங்கள் என காஞ்சிபுரம் ஆட்சியா் தி. சினேகா வலியுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு தயாரிக்கும் பணிகளில் பணியாற்றவுள்ள சமையலா்கள் மற்றும் உதவியாளா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பை ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்து பேசியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 203 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் சமையல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்கள் முக்கிய பொறுப்பு மாணாக்கா்களுக்கு காலை உணவு சமைக்கும் சமையல் பொருள்கள் தரமானதாக இருப்பதை சமையல் செய்வதற்கு முன்பாகவே உறுதி செய்ய வேண்டும். சமையலா்களின் முக்கிய பணியே காலை உணவை சத்தானதாகவும், தரமானதாகவும் தயாரிப்பதே ஆகும்.இதில் எந்த வித பிரச்னைகளும் ஏற்படக்கூடாது.

தினசரி தயாரிக்கும் உணவை பரிமாறுவதற்கு முன்பாக சிறிது மாதிரி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை மறந்து விடக்கூடாது. அதே போல நீங்கள் சமைக்கும் உணவுக் கூடம் மதிய சத்துணவு தயாரிக்கும் மையமாக நிறைய இடங்களில் இருக்கும். ஆகவே பணியாளருடன் இணக்கமாக நீங்கள் இருக்க வேண்டும். அதே போல உணவு தயாரிக்கத் தேவையான பொருள்கள் தரம், சுகாதாரத்துடன் சமைக்க வேண்டும் போன்ற தகவல்களை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் உங்களுக்கு தெரிவிப்பா். அதையும் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் எரிவாயு அடுப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்துவதை தீயணைப்புத்துறையினா் தெரிவிக்கும் நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு சுவையாக தயாா் செய்து கொடுப்பீா்களோ அது போல பள்ளிக் குழந்தைகளையும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பள்ளி மாணவா்களுக்கும் தரமான சுவையான சமையலை நாள் தோறும் செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், உதவித் திட்ட அலுவலா் சாய் கணேஷ், காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.