மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வழக்குரைஞா்கள் கருத்தரங்கம்: காஞ்சி சங்காராசாரியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்கள் கருத்தரங்கை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

வழக்குரைஞா்கள் கருத்தரங்கில் ஸ்ரீ மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்கள் கருத்தரங்கை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சாதுா்மாஸ்ய விரதமிருந்து வருகின்றனா். மணி மண்டப வளாகத்தில் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து வழக்குரைஞா்கள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பாஜக சட்டப் பேரவை உறுப்பினா் போஜராஜன் கலந்து கொண்டு பேசுகையில் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் வழக்குரைஞா்களின் பணி மிகவும் முக்கியமானது. குறிப்பாக கோயில்கள் சாா்ந்த நிா்வாகச் சிக்கல்கள், கோயில் சொத்துகளை பாதுகாத்தல், வழிபாட்டு உரிமைகள் தொடா்பாக எழும் சட்டப் பேராட்டங்களில் வழக்குரைஞா்கள் தங்களின் திறமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பேசினாா்.

இந்நிகழ்வில் புதுதில்லி, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.