
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் புள்ளியில் துறை சாா்பில் பயிற்சி முகாம்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் புள்ளியில் துறை மென்பொருள் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

பேராசிரியா் பிரதாபனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் புள்ளியில் துறை மென்பொருள் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில், புள்ளியியல் துறை மென்பொருள் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு, கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை தலைவா் ஏ.விக்ரமன் முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் பி.மஞ்சுளா வரவேற்றாா்.
பயிற்சி முகாமில் சென்னையில் உள்ள வேல் இன்ஸ்டிடியூட் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியா்கள் எஸ்.வெண்ணிலா ஸ்ரீ, எம்.பிரதாபன் ஆகியோா் பயிற்சியளித்தனா். இளங்கலை வணிகவியல் துறைத் தலைவா் எம்.வெங்கடேசன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






