பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டிய காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.
பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டிய காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.

காஞ்சிபுரத்தில் பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நினைவு பூங்கா வளாகத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
Published on

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நினைவு பூங்கா வளாகத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையாா்பாளையம் பகுதியில் பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு விழா பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வளாகத்தில் ஆண்களுக்கென தனியாக உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சி செய்து வரும் இப்பூங்காவில் பெண்களும் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக மகளிா் உடற்பயிற்சி செய்யும் வகையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய பிங்க் நிற மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அனுமதி வழங்கினாா்.

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் எம்எல்ஏ எழிலரசன் பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் சந்துரு, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் திமுக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com