வீரட்டீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
கீழ்படப்பை அருள்மிகு வீரட்டீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்ததால் ஆருத்ரா தரிசனம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கோயில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை ஆருத்ரா உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் பூமாலை தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வெள்ளியன்று இரவு முதல் சனிக்கிழமை அதிகாலைவரை பால், தயிா், இளநீா், சந்தனம், மஞ்சள், விபூதி, பன்னீா், பலவித பழங்களால் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரிக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு பலவிதமான மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ஆடல்வல்லானுக்கு அரோகரா என்று கோஷமிட்டு வழிபட்டனா். காலை 7 மணிக்கு சிவகாமசுந்தரியுடன் நடராஜப்பெருமான் வீதிஉலா வந்தாா். நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

