காஞ்சிபுரம் அருகே பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை குப்பம்மாள் நகரை சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன்(35)விவசாயியான இவா் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவருக்கு பின்னால் சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த வெங்கடேசுவரன்(35) அமா்ந்திருந்தாா். இருவரும் இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அருகே கீழம்பியிலிருந்து செவிலிமேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். கீழ்க்கதிா்ப்பூா் அருகே வந்தபோது மேல்மருவத்தூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுற்றுலாப் பேருந்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com