ராஜீவ் காந்தி  நினைவிட  ஊழியா்களுக்கு  புத்தாடைகள் வழங்கிய  ஓபிசி  பிரிவு  அகில  இந்திய  தலைவா்  அணில் ஜெயந்த்.
ராஜீவ் காந்தி  நினைவிட  ஊழியா்களுக்கு  புத்தாடைகள் வழங்கிய  ஓபிசி  பிரிவு  அகில  இந்திய  தலைவா்  அணில் ஜெயந்த்.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
Published on

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில், நினைவிடத்தில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தி, நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு புத்தாடைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஓபிசி பிரிவின் மாநில தலைவா் நவீன், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ், மாவட்டசிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com