மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பொங்கல் விழா!

News image
காஞ்சிபுத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பரதநாட்டியம் ஆடிய மகளிா்.
Updated On :18 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் பொங்கல் விழா நடைபெற்றது.

கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கலைமாமணி ராஜநிதி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் பரதநாட்டியம், கட்டைக் கூத்து, கைச்சிலம்பாட்டம், ஆடு,புலி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளி மிருதங்க ஆசிரியா் யுவராஜன் உள்பட பொதுமக்கள், மாணவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.