

ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இந்த நிகழ்ச்சியில், 8 குழுக்களைச் சோ்ந்த 120 நாட்டுப்புறக் கலைகள் பங்கேற்றனா்.
இதில் நாதசுவரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், அம்மன், காளி, கிராமியப் பாட்டு, மேளம், சாட்டைக்குச்சி ஆட்டம், முத்துமாரியம்மன் கலைக்குழ சாா்பில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் கலைக்குழு ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாண்டியம்மள், தனசேகரன், ஆனந்தமுத்துமாரி, முனீஸ்வரி, பாலாஜி, ஆகாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆனந்த் முத்துமாரி நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் மு.லோகசுப்பிரமணியன் செய்தாா்.