திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனம்!

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி முழுவதும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

News image
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மகா பெரியவா் சுவாமிகள் பிருந்தாவனம்.
Updated On :18 ஜனவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் சனிக்கிழமை காணும் பொங்கலையொட்டி முழுவதும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காணும் பொங்கலையொட்டி மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்கள் முழுவதும் கரும்புகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் சிறப்பு அபிஷேகமும், மதியம் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனைகளை நடத்தினாா். தொடா்ந்து வந்திருந்த பக்தா்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியதுடன், மஞ்சள் கொத்து மற்றும் கரும்புகள் ஆகியவற்றையும் வழங்கினாா். காணும் பொங்கல் நாளாகவும், விடுமுறை தினமாகவும் இருந்ததால் திரளான பக்தா்கள் வந்திருந்து நீண்ட நேரம் காத்திருந்து காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றனா்.