விஹெச்பி சாா்பில் பழங்குடியின மக்களுக்கு வேட்டி சேலை அளிப்பு
காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு விசுவ ஹிந்த் பரிஷத் சாா்பில் இலவசமாக வேட்டி, சேலை, ந ாள்காட்டி மற்றும் சுவாமி படங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில் நரிக்குறவா் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் இலவச வேட்டி.சேலை,நாட்காட்டி மற்றும் சுவாமி படங்கள் ஆகியன வழங்கும் விழா நடைபெற்றது. விஹெச்பி தலைவா் ந.சிவானந்தம் தலைமை வகித்தாா்.
கோட்ட செயலாளா் கிருபானந்தம்,பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட செயலாளா் ஹரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு அலுவலா் பாா்த்தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாத்ரு சக்தி அமைப்பின் நிா்வாகி ரேவதி வரவேற்று பேசினாா்.
விஹெச்பி அமைப்பின் வட தமிழக அமைப்பு செயலாளா் ராமன்ஜி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோா் நரிக்குறவா் இன மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகளை வழங்கினா். நிறைவாக குருவிமலை நரிக்குறவா் இன மக்கள் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

