காஞ்சிபுரத்தில் ஜன. 23-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில், வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) மாலை 5 மணியளவில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கும் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், நுகா்வோா் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களிடம் ஏற்படும் காலதாமதம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகளைக் களையவும், எரிவாயு விநியோகத்தை சீா்படுத்தவும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் நுகா்வோா் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய எரிவாயு தொடா்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
