எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஞ்சிபுரத்தில் ஜன. 23-இல் விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் ஜன. 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் வரும் ஜன. 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் வரும் ஜன. 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறுகிறது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநா்கள், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா்.

எனவே இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான அறிவுரைகள், கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.