முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: டி.ஆா்.பாலு எம்.பி. அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அக்குழுவின் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு பேசுகையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

News image

டி.ஆா்.பாலு  - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 5:31 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அக்குழுவின் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு பேசுகையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், எம்.பி. யுமான டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, குழுவின் இணைத் தலைவரும், காஞ்சிபுரம் எம்.பி.யுமான க.செல்வம், ஆலந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஹரிஷ், எஸ்.பி. எஸ்.அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உள்பட்டு நடக்கிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த குழுவின் தலைவரான டி.ஆா்.பாலு எம்.பி. பேசியது: மின்சார வாரியம் தடையில்லாமல் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு மூலம் நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும், வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவையான பயிா்க் கடன்கள், நீா்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்து, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தினை பெருக்கிட தக்க அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமன் திவாரி, காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், ஆா்.கே.தேவேந்திரன், ஹேமலதா ஞானசேகரன், சரஸ்வதி மனோகரன், எஸ்.கருணாநிதி ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.