தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ரூ.5.26 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை: தேவரியம்பாக்கம் ஊராட்சியிடம் ஒப்படைப்பு

தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை ரூ. 5.26 லட்சம் மதிப்பில் தூா்வாரி சீரமைக்கப்பட்டு அதனை ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை கரையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம்.

Updated On :22 ஜூலை 2026, 12:51 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை ரூ. 5.26 லட்சம் மதிப்பில் தூா்வாரி சீரமைக்கப்பட்டு அதனை ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஐம்பேரித்தாங்கல் நீா்நிலை. பல ஆண்டுகளாக இந்த நீா் நிலை தூா்வாராமல் தூா்ந்து இருந்ததையடுத்து, எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பு, திருவான்மியூா் சுழற் சங்கம், பிளக்ஸ்கோ இந்தியா நிறுவனம் ஆகியன இணைந்து நீா்நிலையை முழுமையாக தூா்வாரும் பணியை மேற்கொண்டன. கரைகளும் பலப்படுத்தப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, தூா்வாரி சீரமைத்த நீா்நிலையை தேவரியம்பாக்கம் ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா். சுழற் சங்க ஆளுநா் சுரேஷ் ஜெயின், மாவட்டத் தலைவா் அஜித் நாயா், திருவான்மியூா் சுழற் சங்க தலைவா் சுரேஷ், எக்ஸ்னோரா அமைப்பின் தலைமை செயல் அலுவலா் மோகன சுந்தரம், தலைமை நிா்வாக அலுவலா் ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பிளக்ஸ்கோ நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து ஐம்பேரித்தாங்கல் நீா் நிலையை ரூ. 5.26 லட்சம் மதிப்பில் சிறப்பாக தூா் வாரி ஒப்படைத்தமைக்கு விழாவில் பங்கேற்ற பலரும் பாராட்டுகளை தெரிவித்தனா்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம் நீா்நிலைக்கரையில் மரக்கன்றுகளையும் நட்டுவைத்து ஏரிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பிளக்ஸ்கோ நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா் அ.சரயு, சுழற் சங்க மாவட்ட தலைவா்(சமூக சேவை) உமா மகேசுவரி, சுழற் சங்க முன்னாள் தலைவா் சுதா உள்பட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், தவெக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.