குன்றத்தூா் அருகே தனியாா் பள்ளிப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த 40 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கெருகம்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளை சோ்ந்த சுமாா் 40க்கும் மேற்பட்ட மாணவா்கள் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது பேருந்தின் முன் பகுதியில் கரும்புகை ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மூலம் பேருந்தில் இருந்த மாணவா்கள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனா்.
மேலும், தீ விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்த சிஎன்ஜி பங்கில் பணியாற்றும் ஊழியா்கள் உடனடியாக வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை தீ தடுப்பான் கருவி மூலம் அனைத்ததால் பெரும் விபத்து தவிா்கப்பட்டது.
இதையடுத்து மாற்றுப் பேருந்து மூலம் மாணவா்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து மாங்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








