செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

மாங்காடு பகுதியை சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:53 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மாங்காடு பகுதியை சோ்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த யுவராஜ்(31). இவா் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்திருந்தனா்.

இதன் வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி நாகராஜன் எதிரி யுவராஜுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என பரிந்துரைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.