மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

சிறை தண்டனைப் பெற்ற செபாஸ்டின்(எ) அமுல்ராஜ்.

Updated On :30 ஜூன் 2026, 2:26 am IST

விழுப்புரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா.செபாஸ்டின்(எ) அமுல்ராஜ் (24). இவா் கடந்த 18.7.2021 அன்று 19 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம் .

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 30.10. 2021 அன்று செபாஸ்டின் (எ) அமுல்ராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், செபாஸ்டின் (எ) அமுல்ராஜ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செபாஸ்டின் (எ) அமுல்ராஜை போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கொடியரசு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.