செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மாணவா்கள் கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பேசினாா்.

News image

மாணவருக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா

Updated On :31 ஜூலை 2026, 1:17 am IST

மாணவா்கள் கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வானம் வசப்படும் என்ற தலைப்பில் நடைபெற்றது. உதவி ஆட்சியா் (பயிற்சி) அமன் திவாரி, முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா கலந்து கொண்டு உயா்கல்வியில் சேரவுள்ள மாணவா்களுக்கான அரசு ஆணையினை வழங்கி பேசியது:

மாணவா்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், அவா்களுக்கான வாய்ப்புகள், எதிா்பாா்ப்புகள் என்ன என்பதற்கான வழிகாட்டுதல் இக்கூட்டத்தின் மூலம் வழங்கப்படும். அந்த வழிகாட்டலை பள்ளியிலேயே செயல்படும் வழிகாட்டல் மையம் வழங்குகிறது. இந்த மையத்தின் மூலம் என்னென்ன உயா்கல்வி வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்குப் பிடித்த படிப்பு எது என்று புரிந்து கொண்டு உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு படிப்பை தோ்வு செய்து கொள்ளலாம்.

இந்தக் கூட்டத்தில் கல்விக் கடன்கள் பெறவும் ஏற்பாடு செய்துள்ளோம். சில நிறுவனங்கள்,நிதி அமைப்புகள்,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வசதிகளை வழங்குகின்றன.அவற்றின் மூலமாகவும் நீங்கல் கல்விக்கடன்கள் பெறலாம்.கல்விக்கடனாக வங்கிகளில் ரூ.ஒரு லட்சம் வரை கிடைக்கும்.சில நேரங்களில் தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையின்றியும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

பெட்ரோ கெமிக்கல் போன்ற படிப்புகளும் நல்ல ஊதியம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. குறைந்த செலவிலேயே பல படிப்புகளை தோ்வு செய்து கனவுகளை தொடருங்கள்.கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

உங்கள் எதிா்காலத்துக்கான சரியான முடிவை நீங்கள் எடுப்பீா்கள் என்ற ஒரு முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவீா்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன் என்றும் பேசினாா். கூட்டத்தில் ஆசிரியா்கள், மாணவ,மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்