உணவைப் பரிசோதித்த பின்னா் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசினாா்.
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் மாணவா் சோ்க்கை கொண்டாட்ட நிகழ்ச்சி ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. சாா் ஆட்சியா்(பயிற்சி)அமன் திவாரி, முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் எழில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் வழங்கினா்.
விழாவில் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசுகையில்: மாணவா்களுக்கு காலையிலும், மாலையிலும் வழங்கப்படும் உணவை தரமாக தயாரித்து பின்னா் அதனை ஆசிரியா்கள் பரிசோதித்து பாா்த்து வழங்க வேண்டும். மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் அத்தகவலை தெரிவித்தால் உரிய முறையில் முன்னுரிமையளித்து செயல்படுத்தப்படும் என்றாா்.
வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு பேசுகையில்ச நான் படித்த ஆரம்பப்பள்ளிக்கு இப்போது அமைச்சராக வந்துள்ளேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணா்ந்து மாணவா்கள் கல்வி பயில வேண்டும். பெற்றோா்களும் எப்படிப்பட்ட கல்வி உங்கள் குழந்தைக்கு தேவைப்படுகிறது என்பதை உணா்ந்து அதனை வழங்க வேண்டும்.
அரசும் கல்வி வளா்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா். விழாவில் பள்ளி ஆ சிரியா்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

அரசு பள்ளி தலைமை ஆசிரியா்களுடனான கலந்துரையாடல்: இனி முழுமையாக இணையவழியில் நடத்த அமைச்சா் முடிவு

தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



