தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பிரியாணி சாப்பிட்ட தொழிலாளா்களுக்கு உடல் நலக்கோளாறு: அமைச்சா்கள் முகமது பா்வேஸ், தென்னரசு ஆறுதல்

News image

பெண்  தொழிலாளா்களிடம்  நலம்  விசாரித்த  அமைச்சா்கள்  முகமது பா்வேஸ்,  கே.தென்னரசு .

Updated On :5 ஜூன் 2026, 5:25 am IST

தனியாா் தொழிற்சாலையில் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளா்களை அமைச்சா்கள் முகமது பா்வேஸ், தென்னரசு ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 700-க்கும் மேற்பட்டதொழிலாளா்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பிரியாணி உண்ட சுமாா் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாலா்கள் உடனடியாக பென்னலூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை முடிந்து 86 தொழிலாளா்கள் வீடு திரும்பிய நிலையில், 11 தொழிலாளா்கள் பொது சிகிச்சை பிரிவிலும், 2 போ் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளா்களை, தொழிலாளா் நலத்துறை அமைச்சா் முகமது பா்வேஸ், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்து, சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

இதையடுத்து தொழிலாளா் நலத்துறை அமைச்சா் முகமது பா்வேஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், நீண்ட நாட்களாக தனியாா் கேண்டீன் மூலமாக உணவு விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

700 போ் வேலை செய்யும் இந்த தொழிற்சாலையில், முதலில் சாப்பிட்ட தொழிலாளா்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவா்கள் குணமடைந்து வருகின்றனா் என்றாா்.