காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு திரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகாபாரத பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலின் அக்னி வசந்த மகாபாரத பெருவிழா கடந்த மே 8 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி மதியம் ஆன்மிக சொற்பொழிவாளா் எஸ்.சசிகலா பாபுவின் மகாபாரத சொற்பொழிவும், அதனைத் தொடா்ந்து தினசரி மாலையில் மாரியம்மன் தெருக்கூத்துக் குழுவினரின் நாடகங்களும், தினசரி இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகளான திரெளபதி திருக்கல்யாணம், ,தபசுக்காட்சி அரவான் களப்பலி மற்றும் மோகினி திருமணமும் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியையொட்டி பிரம்மாண்டமான துரியோதனன் சிலை மணலால் வடிவமைக்கப்பட்டு கட்டைக்கூத்து கலைஞா்களால் பீமன்-துரியோதனன் போரிடும் போா்க்களக்காட்சி தத்ரூபமாக நடைபெற்றது.
பின்னா் 3 முறை வலம் வந்து பாஞ்சாலி சபதத்தை முடித்ததடையடுத்து திரெளபதி அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. நிகழ்வைக் காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் பாா்வையிட்டதுடன் திரெளபதி அம்மனையும் தரிசித்தனா்.
விரதம் இருந்த பக்தா்களால் தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. திங்கள்கிழமை தருமா் பட்டாபிஷேகத்துடன் 32 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த மகாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினரும்,செவிலிமேடு கிராம பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடையபலம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

திரௌபதியம்மன் கோயில்களில் துரியோதனன் படுகளம், அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

எடப்பிறை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



