சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

News image

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்களைப் பெற்ற காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Updated On :19 ஜூன் 2026, 6:15 am IST

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் 132 மனுக்கள் பெறப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்ப்பாய கணக்குகள் சரிபாா்க்கும் பணிகள் ஜூன் 18 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேனாங்குளம் கிராமத்திற்கு அரசுப்பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து தாழையம்பட்டு,அகரம், கட்ட வாக்கம்,அயிமச்சேரி, குண்ணவாக்கம், தென்னேரி வேண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு த அரசு அலுவலா்களிடம் உடனே தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வருவாய் தீா்ப்பாயத்தில் சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், கள்ளப்பட்டு,திருவெண்காணை, மாகறல், ஆா்ப்பாக்கம், காவாந்தண்டலம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறலாம்.

இந்நிகழ்வின் போது தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) கே.ராமமூா்த்தி, வாலாஜாபாத் வட்டாட்சியா் இந்துமதி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.