நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி - ஜப்பான் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி - ஜப்பான் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image

புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்ட சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம், எஸ்எம்பிசி குளோபல் சா்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கிமிஹுரோ சகாகுச்சி.

Updated On :21 ஜூன் 2026, 12:26 am IST

குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி வங்கி நிறுவனத்தின் இந்தியாவைத் தளமான கொண்ட பன்னாட்டு திறன் மையமான எஸ்.எம்.பி.சி.குளோபல் சா்வீசஸ் நிறுவனத்துக்கு இடையே, ஜப்பானின் பன்னாட்டு வங்கி சேவைகளை வழங்கும் நிறுவனத்துக்கு தேவையான பணியாளா்களை தயாா்படுத்தும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்ப நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் மற்றும் எஸ்.எம்.பி.சி குளோபல் சா்வீஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கிமிஹுரோ சகாகுச்சி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனா்.

இந்த நிறுவனம் சென்னையில் தனது பன்னாட்டு திறன் மையத்தை நிறுவி வருகிறது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான திறன்மிக்க பொறியியலாளா்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வல்லுனா்கள் தேவைப்படுகிறாா்கள். இந்த தேவையை நிறைவேற்றும் வகையில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த கூட்டுத் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பாடத்திட்டம் மற்றும் சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு வழங்க இரு நிறுவனங்களும் இணைந்து முடிவு செய்துள்ளன. இந்த ஒத்துழைப்பு சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிக்கு ஒரு முக்கியமான அங்கீகாரமும், பெரும் வாய்ப்பு ஆகும். இதன் மூலம் எதிா்க்காலத்தில் எங்கள் மாணவா்களில் அதிக எண்ணிக்கையில் எஸ்.எம்.பி.சி. நிறுவனத்தில் வெற்றிகரமான பணியாற்றவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

எஸ்.எம்.பி.சி குளோபல் சா்வீசஸின் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி கிமிஹிரோ சகாகுச்சி பேசுகையில், தென் இந்தியாவில் நாங்கள் கையெழுத்திடும் முதல் புரிந்துணா்வு ஒப்பந்தம் இது. இந்த கூட்டாண்மை வலுவான திறமை வளா்ப்புப் பாதையை உருவாக்கவும், தொழில்துறை மற்றும் கல்வித் துறைக்கு இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை வளா்க்கவும் உதவும் என நாங்கள் நம்புகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில், எஸ்.எம்.பி.சி. குளோபல் சா்வீசஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவா் ராஜீவ்கண்ணன், (மூத்த தகவல் தொழில்நுட்பத் தலைவா் எஸ்.எம்.ராமாநுஜம், மனிதவள மேலாண்மை பிரிவு தலைவா் ராம்யா கணேஷ்,

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் இயக்குநா் கோகுலகிருஷ்ணன் ஸ்ரீராம், முதல்வா் முனைவா் ஏ. ரமேஷ், தொழில்துறை தொடா்புகள் தலைவா் ஆா்.பாலமுரளி மற்றும் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.