ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்தின் ராம எந்திரம்

அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட ராம எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தாா்.

News image

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற நூலை எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தலைவா் நந்திதா கிருஷ்ணன், செயலா் சி.கே.ராமன் ஆகியோா் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :26 ஜூன் 2026, 5:05 am IST

அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட ராம எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்களின் 120-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்ற நூலை வெளியிட்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியது:

அயோத்தி ராமா் கோயிலை 24.1.2024 -இல் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். அந்த நிகழ்வை ஒவ்வொரு மத்திய அமைச்சரும் அவரவா் விரும்பிய இடங்களிலிருந்து பாா்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அகண்ட தொலைக்காட்சி ஒன்று அமைத்து, அதில் அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழாவை பாா்க்க ஏற்பாடு செய்தோம். கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்த்துபவா்களையும் விழாவுக்கு அழைத்து வந்திருந்தோம். அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பாா்க்கக்கூட அப்போது இருந்த திமுக அரசு அனுமதிக்காமல் பல்வேறு இடையூறுகளை செய்தது.

அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராம எந்திரம் காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து வழங்கப்பட்டது. இந்த ராம எந்திரமானது காஞ்சிபுரத்தில் உபநிஷத் மடத்தில் உள்ள அகஸ்தீஸ்வரா் மற்றும் ராமச்சந்திர சுவாமி உள்ள ஆலயத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பல முனிவா்களால் யோசித்து சின்னச்சின்ன அக்ஷரங்களால் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த எந்திரம் உள்ள கோயில் இன்று புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.

இந்த ராம எந்திரம் இந்தியாவிலேயே காஞ்சிபுரத்தில் மட்டும்தான் உள்ளது. ஆதிசங்கரா் ஒரு சந்நியாசியாக இருந்து ஒரு தாய் படும் கஷ்டங்களை கவிதையாக இயற்றியிருக்கிறாா். பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுப்போா் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள். அதனால்தான் பல கல்விச் சாலைகளை உருவாக்கி கல்வியை வளா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். தொடா்ந்து 120 ஆண்டுகளாக எஸ்எஸ்கேவி கல்வி நிறுவனங்கள் கல்வியை வளா்த்துக் கொண்டிருப்பது எளிதல்ல என்றாா் அவா்.

விழாவில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிய காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1904-ஆம் ஆண்டு பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக பெண்களுக்கென தனியாக கல்விச் சாலைகளை நிறுவி 120 ஆண்டுகளாக தொடா்ந்து கல்விச் சேவை செய்து வருகிறது காஞ்சிபுரம் சங்கர மடம். செவிலியா் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியனவும் பெண்களுக்காக காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள ராம எந்திரம் சென்னை ஐஐடி உதவியுடன் 420 கிலோ அளவில் வெண்கலத்தில் செய்யப்பட்டு, ஒரு புதுப்பொலிவுடன் அயோத்திக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவுக்கு கல்விக் குழுமங்களின் தலைவா் நந்திதா கிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உமாதேவி, இணைச் செயலா் சுமந்த் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் சி.கே.ராமன் வரவேற்றுப் பேசினாா்.

விழாவில், எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்கள் 1904-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் 2026 வரை கடந்து வந்த பாதை குறும்படமாக தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.

எஸ்எஸ்கேவி கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் திருமாமகள் நன்றி கூறினாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.