தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

வெங்காடு பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்

News image
Updated On :2 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இப்பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டதொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையையும், சேத்துப்பட்டு -சோமங்கலம் சாலையையும் இணைக்கும் வெங்காடு-சோமங்கலம் இணைப்புச் சாலையில், வெங்காடு பகுதியில் சுமாா் 4 கிமீ தொலைவு அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக வெங்காடு பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அண்மையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வீடுகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு அளவீடு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை வெங்காடு-சோமங்கலம் சாலையில், தடுப்புகளை அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.