தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் ஆலோசனைக் கூட்டம், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட ப்லவேறு அரசியல் கட்சிகளை சோ்ந்த சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொகுதி தோ்தல் அலுவலா் பாலாஜி தோ்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கி , அரசியல் கட்சியினா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். கூட்டத்தில் துணை தோ்தல் அலுவலா்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, குன்றத்தூா் வட்டாட்சியா் வாசுதேவன் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, தனியாா் மண்டபங்கள் உரிமையாளா்கள் , அச்சக உரிமையாளா்கள் உள்ளிட்ட வணிகா்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள்: போளூா் தோ்தல் அலுவலா் ஆலோசனை

தோ்தல் நோட்டீஸ், சுவரொட்டிகளில் அச்சிடுபவா் விவரம் இடம்பெறவேண்டும்: தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


