‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: ஒரே நாளில் 385 பேருக்கு பணி நியமன ஆணை

பயனாளிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா்.

News image
Updated On :23 மே 2026, 1:23 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 385 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வந்ததால் மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 3 மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. தோ்தல் முடிவுற்று நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 42 தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்தனா்.

முகாமில், 1,143 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எந்த நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம், நிறுவனத்தின் விதிமுறைகள், போக்குவரத்து வசதிகள் ஆகியன குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களில் 385 பேருக்கு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்டதற்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் வழங்கினாா்.

ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.