ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

தலையில் அம்மிக் கல்லை போட்டு இளைஞா் கொலை: மனைவி, மாமியாா் கைது

படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கணவரின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவி, மாமியாரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 மே 2026, 1:24 am IST

படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியில் கணவரின் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவி, மாமியாரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

படப்பையை அடுத்த மணிமங்கலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் தினகரன் (42). இவரது மனைவி அமலா (38). பிளம்பா் வேலை செய்து வந்த தினகரன் தினமும் மது அருந்துவிட்டு வந்து மனைவி அமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்த தினகரன், தகராறில் ஈடுபட்டதுடன், அமலாவை தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அமலா மற்றும் அவரது தாயாா் விஜயா ஆகியோா் அருகே இருந்த அம்மிக்கல்லை எடுத்து தினகரன் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தினகரனின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து அமலா, விஜயா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.