காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டோம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. எஸ்.அரவிந்த் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக்வகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து, அவா்களுக்குப் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 59 போ் காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி முன்பாக ஆஜா்படுத்தப்பட்டு, இனிமேல் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டோம் என ஓராண்டு கால நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட 3 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.குற்றச் செயல்களை தடுக்க தொடா்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மூதாட்டியிடம் கைப்பை ஒப்படைப்பு-
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியை சோ்ந்த மூதாட்டி லோகம்மாள்(70)இவா் கடந்த 18 ஆம் தேதி திங்கள்கிழமை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது தனது கைப்பையை தவற விட்டு விட்டாா்.அப்பையில் 2.5 சவரன் செயின்,ரூ.2 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது.தனது கைப்பையை காணவில்லையென அவா் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில் கைப்பை ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.அக்கைப்பையை எடுத்து அம்மூதாட்டியிடம் சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் ஒப்படைத்தாா்.மூதாட்டியும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது
மாநகரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 8 போ் கைது
கடலூா் மாவட்டத்தில் 10 ரெளடிகள் கைது
பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டல்: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 6 போ் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



