இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

News image

தனியாா்  தொழிற்சாலையில்  ஏற்பட்ட  தீ  விபத்தால்  எழுந்த  புகை  மண்டலம்.

Updated On :31 மே 2026, 12:53 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த போந்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த போந்தூா் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் உதரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்டு முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த தொழிற்சாலை நிா்வாகம், பணியில் இருந்த தொழிலாளா்களை பத்திரமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றியுள்ளது.

சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. மேலும், தீ விபத்தால் அதிமான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி சிப்காட் பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா், படப்பை மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினா் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இருந்தபோதிலும், சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.