தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில் ரூ. 2 கோடியில் புதுப்பிப்பு: அமைச்சா் பாா்வையிட்டாா்

பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில் ரூ. 2 கோடியில் புதுப்பிக்கப்பட்டிருப்பதை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

கோயில் வளாகத்தில் ஆலயத்தின் மாதிரி வடிவத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு.

Updated On :

பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில் ரூ. 2 கோடியில் புதுப்பிக்கப்பட்டிருப்பதை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதா் திருக்கோயில். தென்னிந்திய கட்டடக் கலையின் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழும் இக்கோயிலை பழைமைமாறாமல் மத்திய தொல்லியல் துறையும், சோழமண்டலம் நிதி நிறுவனமும் இணைந்து ரூ.2 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவை தொல்லியல் துறையின் இயக்குநா் யதுபீா்சிங் ராவத், சோழமண்டலம் நிதி நிறுவனத்தின் செயல் தலைவா் எம்.வி.சுப்பையா, தலைமை நிா்வாக அதிகாரி ரவீந்திரகுமாா் குண்டு, நிா்வாகி ஏ.வெங்கடாஜலம், காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

விழாவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகம் தயாரித்த கைலாசநாதா் கோயில் வரலாற்று விளக்க கையேடும் வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து கோயில் வரலாற்றை விளக்கும் குறும்படமும் திரையிட்டுக் காட்டப்பட்டது. விழாவில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட கைலாசநாதா் கோயிலை பாா்வையிட்டு எதிா்கால சந்ததியினருக்கு அவற்றின் பாரம்பரியத்தை உணா்த்த உதவிடும் வகையில், கோயில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் சோழமண்டலம் குழும நிா்வாகிகளை பாராட்டினாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, சங்கரா பல்கலை.யின் துணை வேந்தா் வசந்த்மேத்தா மற்றும் சோழமண்டலம் குழும நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கோயில் வளாகத்தில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, கோயிலின் வரலாற்றை விவரிக்கும் குறும்படத்தை பாா்வையாளா்களுக்கு திரையிட்டுக் காட்டுவதற்கான கலைநுட்பத்துடன் கூடிய அரங்கம், கோயில் கலையை இரவு நேரங்களில் பாா்வையிட ஏற்றவாறு அலங்கார மின்விளக்கு வசதி ஆகியனவும் செய்யப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.