பைக்-லாரி மோதல்: தந்தை, மகள் மரணம்!
ஸ்ரீபெரும்புதூா் அருகே பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அருகே பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட கோவா்தன நகா் பகுதியைச் சோ்ந்த ரவிசங்கா் (51). இவரது மகள் சௌந்தா்யா (21). சௌந்தா்யா பெங்களூரில் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக வந்திருந்தாா்.
புதன்கிழமை பெங்களூா் செல்ல இருந்த செளந்தா்யா, கடைக்கு செல்வதற்காக தந்தை ரவிசங்கருடன் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னா் லாரி பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி ரவிசங்கரும், செளந்தா்யாவும் சாலையில் விழுந்தனா். இதில் லாரியின் சக்கரங்கள் இருவரின் தலை மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

