சோளிங்கா் அருகே அரசு பேருந்து - பைக் மோதல் தந்தை, மகள் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே பைக் மீீதுஅரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பைக்கில் பயணித்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்த சுரேஷ்பாபு, மதுமிதா
சோளிங்கா் அருகே பைக் மீீதுஅரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பைக்கில் பயணித்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூரை சோ்ந்தவா் சுரேஷ்பாபு (48). அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா். இவரது மனைவி மஞ்சுளா, மகள் மதுமிதா(21). சித்தூரில் உள்ள கல்லூரியில் மதுமிதா படித்து வந்தாா். சுரேஷ்பாபுவின் மனைவி மஞ்சுளாவின் வீடு திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் உள்ளது. திருத்தணியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக ஏற்கெனவே மஞ்சுளா திருத்தணியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.
சுரேஷ்பாபுவும், அவரது மகள் மதுமிதாவும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சித்தூரில் இருந்து சோளிங்கா் வழியாக திருத்தணி சென்று கொண்டிருந்தனா். வழியில் சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் சுரேஷ்பாபு, மதுமிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சோளிங்கா் காவல் நிலைய போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






