சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிவப்புச் சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகப் பெருமான்.

Updated On :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், கந்த சஷ்டி விழா தொடங்கி மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, வெற்றிலை, சாமந்தி, செண்பகம் மலா் மாலைகளும், வெற்றிலைமலா் கீரிடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவப்பு பட்டாடை அணிந்து, சிவப்பு ரோஜா மாலைகள் அணிந்து சிவப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஆறுமுகா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், யாக பூஜைகள் நடைபெற்றன. சஷ்டி மண்டபத்தில் உற்சவா் ஆறுமுகப் பெருமானுக்கு காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளும் சத்ரு சங்கார திரிசதீ யாகம் நடைபெற்றது.

14-ஆம் தேதி இரவு உற்சவா் சுப்ரமணியசாமி வல்லக்கோட்டை அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சடயீஸ்வரா் திருக்கோவிலுக்கு எழுந்தருள உள்ளாா். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதையடுத்து 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம், 16-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்துசாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.