
தேவரியம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்: ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா் பங்கேற்பு
தேவரியம்பாக்கத்தில் கிராம சபைக் கூட்டம்: ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா் பங்கேற்பு

தேவரியம்பாக்கம் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அமுதவல்லி.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அமுதவல்லி கலந்து கொண்டு பேசினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோமளா, மீனாஸ்ரீ, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அமுதவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வேலை நாள்களை 125 நாள்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்பட மொத்தம் 98 வகையான தீா்மானங்கள் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 100 சதவீதம் வரி செலுத்திய பொதுமக்கள், வீட்டிலேயே திடக் கழிவுகளை தரம்பிரித்து வழங்கிய பொதுமக்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவரியம்பாக்கம் ஊராட்சியிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு விமானத்தில் இலவசமாக அழைத்துச் சென்று திரும்பும் நிகழ்வுக்கும் தனியாா் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்த புரிதல் பொதுமக்களிடம் உள்ளதா என்பதை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அமுதவல்லி நேரடியாக கேட்டறிந்தாா். அவரது கேள்விகளுக்கு துறை அலுவலா்களும், பொதுமக்களும் தெளிவாக பதிலளித்ததை பாராட்டும் வகையில், தேவரியம்பாக்கம் ஊராட்சி ஒரு முன்மாதிரியாக செயல்படுவதாகவும் தெரிவித்தாா். வாலாஜாபாத் வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா நன்றி கூறினாா்.
இந்தக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





